தென்காசி மாவட்டத்தில் புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு; பத்திரிகையாளர்கள் வாழ்த்து..

தென்காசி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பாளராக இளவரசி 07.08.21 சனிக்கிழமை பொறுப்பேற்றார். பத்திரிகையாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கருப்பண்ண ராஜவேல் காரைக்குடி போக்குவரத்து துறைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இதனையடுத்து தென்காசி மாவட்ட புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இளவரசி நியமிக்கப்பட்டார். தென்காசி மாவட்டத்தின் புதிய முதல் பெண் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரான இளவரசி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தென்காசி பத்திரிக்கையாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்