
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டி: இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகில் இருக்கக்கூடிய பூங்கா முறையான பராமரிப்பு இல்லாததால் பயனற்று உள்ளது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் பூங்காவை சுற்றி பொதுமக்கள் சிலரால் மலம், சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தப்படுகிறது . மேலும் மது குடிக்கும் கூடாரமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பேர் தினமும் வந்து செல்கின்றனர். நகரின் மையப் பகுதியாக திகழும் பூங்காவை முறையாக பராமரித்து சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது நேரத்தை ஆரோக்கியமாக செலவிட புதுப்பித்து தர வேண்டுகிறேன். மேலும் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்களையும் அமைத்து தர வேண்டுகிறேன்.
You must be logged in to post a comment.