
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடிதபசு விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்களின் அனுமதியின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 23.07.2021 அன்று சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடித்தபசு விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்கள் தீவிர படுத்தியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதனால் பொதுமக்களின் வசதிக்காக பூஜை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் YouTube வாயிலாக நேரலையில் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோயிலுக்கு வருகை தருவதை தவிர்த்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.