
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக கஞ்சா,புகையிலை,மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்ட விரோதமாக கஞ்சா,மது பாட்டில்கள்,புகையிலை மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 243 நபர்கள் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்குள் (05.07.2021-12.07.2021) சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 63 வழக்குகள் பதிவு செய்து 63 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 441 மது பாட்டில்களும்,கஞ்சா விற்பனை செய்ததாக 17 வழக்குகள் பதிவு செய்யபட்டு 17 குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோ கஞ்சாவும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த லாட்டரி சீட்டுகளும், இதேபோல் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 153 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.