Home செய்திகள் சிறுபான்மையினருக்கு கடன் உதவி;தென்காசி ஆட்சியர் தகவல்..

சிறுபான்மையினருக்கு கடன் உதவி;தென்காசி ஆட்சியர் தகவல்..

by mohan

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் சுயதொழில் தொடங்கவும், கல்விக்கடன் பெறவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விகடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டிவிகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/-கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000- ஆண்டிற்கு 7% வட்டிவிகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையிலும் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டிவிகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை tenkasi.nic.in/forms என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி-627811 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்வி கட்டணங்கள் செலுத்திய இரசீது / செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 9710264879 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!