Home செய்திகள் பொது மக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம்; தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்..

பொது மக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம்; தென்காசி ஆட்சியர் அறிவுறுத்தல்..

by mohan

பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்துதென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கையின் படி கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த 24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு எவ்வித தளர்வுகளும் இன்றி நடைமுறைப்படுத்தப் படும். இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக்கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகை ஆகியவை அனுமதிக்கப்படும். இவை தவிர வேறு எந்த கடைகள், மால்கள் மற்றும் சாலையோர கடைகள் இயங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவை தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே நேரடியாக விநியோகம் செய்யப்படும். இதனை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியே வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன், தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com