Home செய்திகள் மதுரை மாநகராட்சியில் ரூ.100 மதிப்புள்ள காய்கறிகள் தொகுப்புப் பை விற்பனை: கமிஷனர் விசாகன் துவங்கி வைத்தார்

மதுரை மாநகராட்சியில் ரூ.100 மதிப்புள்ள காய்கறிகள் தொகுப்புப் பை விற்பனை: கமிஷனர் விசாகன் துவங்கி வைத்தார்

by mohan

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அறிஞர் அண்ணா மாளிகையில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் அடங்கிய தொகுப்புப் பை விற்பனையை மாநகராட்சி கமிஷனர் ச.விசாகன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசின் உத்தரவின்படி முழு ஊடரங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் 100 வார்டுகளில் 125 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய பைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று 15 இலகுரக வாகனங்கள் மூலம் ரூ.100 மதிப்புள்ள காய்கறி தொகுப்பு பைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தொகுப்பு பையில் தக்காளி, வெண்டைக்காய், அவரைக்காய், சௌசௌ, உருளைக்கிழங்கு, தேங்காய், கத்தரிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி உள்ளிட்ட 10 வகையான காய்கறிகள் அடங்கிய மொத்த காய்கறி தொகுப்பு பை ரூ.100 விலையில் மக்களைச் சென்றடையும் பரவை மொத்த காய்கறி அங்காடியில் இருந்து நேரடியாக மலிவுவிலையில் பெறப்பட்டு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் தன்னார்வலர்களாக வாநண்பா குழுவினர், வழக்கறிஞர்கள் குழு, சந்தோஷ்குமார் குழுவினர், செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகிய குழுவினரால் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.தினமும் காலை 7 மணி முதல் 12 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து காய்கறி தொகுப்பு பையினை வாங்கி பயன்பெறுமாறு கமிஷனர் ச.விசாகன், கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் , மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், வருவாய் உதவியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!