Home செய்திகள் சுரண்டை பகுதியில் வெல்டிங் பட்டறைக்கு சீல்;திருமண வீட்டாருக்கு ரூ.5000 அபராதம்-அதிகாரிகள் அதிரடி..

சுரண்டை பகுதியில் வெல்டிங் பட்டறைக்கு சீல்;திருமண வீட்டாருக்கு ரூ.5000 அபராதம்-அதிகாரிகள் அதிரடி..

by mohan

சுரண்டை பகுதியில் விதிமுறைகளை மீறிய வெல்டிங் பட்டறைக்கு சீல் வைக்கப்பட்டது. சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாத திருமண வீட்டாருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன், சுரண்டை பேருராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுரண்டை வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், சுரண்டை எஸ்ஐசையது இப்ராஹிம் மற்றும் அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வெல்டிங் பட்டறை ஒன்று அரசு விதிமுறைகளை மீறி இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த வெல்டிங் பட்டறையை சீல் வைத்து அதிகாரிகள் அந்த பட்டறைக்கு ரூ5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் சுரண்டை மெயின் ரோட்டில் 10 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கும் அபராதம் விதித்தனர்.மேலும், சுரண்டையில் திருமண வீட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றாத திருமண வீட்டாருக்கு ரூ5ஆயிரம் அபராதம் விதித்தனர். வீரகேரளம்புதூர் வட்டத்திற்குட்பட்ட சுரண்டை பகுதிகளில் வீகேபுதூர் தாசில்தார் வெங்கடேஷ், ஆர்ஐ மாரியப்பன் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணித்து வந்தனர். அப்போது பங்களாச் சுரண்டையிலிருந்து தாயார் தோப்பு செல்லும் வழியில் தனியே பந்தல் அமைத்து திருமண விழா நடைபெற்றது. திருமண விழா நிகழ்விடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளானமுக கவசம் சமூக இடைவெளி பின்பற்றாதது கண்டறியப்பட்டு ரூ.5000/- அபராதம் விதித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com