Home செய்திகள் ம.சு.பல்கலை கழகத்தில் உலக புத்தக தினவிழா..

ம.சு.பல்கலை கழகத்தில் உலக புத்தக தினவிழா..

by mohan

உலக புத்தக தின விழா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. விழாவில் “உடற்பயிற்சி உடலுக்கு நல்லது புத்தகம் வாசிப்பு மூளைக்கும் உள்ளத்திற்கும் உகந்தது” என ம.சு.பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கா.பிச்சுமணி பேசினார். உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உலக புத்தக தின விழா நிகழ்வு நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கா. பிச்சுமணி தலைமை தாங்கினார். வந்திருந்தவர்களை பல்கலைக்கழக நூலகத் துறைத்தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் லெ. மீனாட்சி சுந்தரம் தொடக்கவுரையாற்றினார். உலகப் புத்தக தின சிறப்புரையை தூய யோவான் கல்லூரி முதல்வர். முனைவர் எஸ். ஜான் கென்னடி வழங்கினார். பல்கலைக்கழக நூலக துறை தலைவர் முனைவர்.ப. பாலசுப்பிரமணியன் எழுதிய ‘ உலகை ஆளும் தமிழர்கள் ‘ என்ற நூலை துணைவேந்தர் முனைவர் கா பிச்சுமணி வெளியிட மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அ. மரியசூசை பெற்றுக்கொண்டார். உலகை ஆளும் தமிழர்கள் நூல் விமர்சனத்தை சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினார். தொடர்ந்து தமிழக அரசின் சிறந்த வாசகர் வட்ட விருது பெற்ற திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர். அ. மரியசூசை நூலகர் இரா.வைலட் துணைத் தலைவர் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அ. பாலசுப்பிரமணியன் முத்துசுவாமி சிற்பி பாமா சந்திரபாபு முனைவர் உஷாதேவி முனைவர் நல் நூலகர் முத்துகிருஷ்ணன் டாக்டர் ஹனீப் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் நூலக ஆய்வாளர் மீ. கணேசன் நூலக கண்காணிப்பாளர் சங்கரன் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி நூலகர் சரவணகுமார் தேசிய புத்தக வாசிப்பு இயக்கப்பொருளாளர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நூலகர் முனைவர் திருமகள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் கா. பிச்சுமணி பேசியதாவது, கலைமகள் ஏடு வைத்திருக்கிறாள் திருவள்ளுவர் ஏடு வைத்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். படித்துக்கொண்டே இருக்கிறார்கள் நாமும் வாசிப்பை சுவாசிப்பு போல் கைக் கொள்ள வேண்டும் ஆனால் இன்றைய இளைஞர்கள் தொலைக்காட்சி இணையம் என்று சதா சர்வ காலமும் பொழுதை முழுவதும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் புத்தகம் வாசிக்கும் போதுதான் ஐம்புலன்களும் ஒருங்கிணைந்து இன்பம் அடைகின்றது. மூளை வளர்ச்சி அடைகின்றது. புத்தகம் வாசித்த பிறகு அதனுடைய கருத்தை அசைபோட முடியும், உடற்பயிற்சி உடலுக்கு நன்மை தரும் ,ஆனால் வாசிப்பு மூளைக்கும் உள்ளத்திற்கும் முக்கியமானது. இணையத்தில் பல்வேறு தகவல்கள் இருக்கும் வேக வேகமாக பார்க்க வேண்டும். ஆனால் புத்தகத்தில் ஒரு தனிப்பட்ட செய்தி விபரமாக முழுமையாக கிடைக்கும். புத்தகம் வாசிக்கும் போது பரந்த எண்ணமும் விரிந்த அறிவுத்திறனும் ஏற்படும். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்று கூடிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கை கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் துணையாக இருக்க வேண்டும். என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கா. பிச்சுமணி வேண்டுகோள் விடுத்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com