மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உத்தப்பநாயக்கனூர் அய்யனார்குளம் செல்லம்பட்டி எழுமலை செக்கானூரணி ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மாலை வேளையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த போடுவார்பட்டி கிராமத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதில் அய்யனார்களம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தோட்டத்தில் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நடப்பட்டிருந்த வாழை மரங்கள் குலையோடு சாய்ந்து விழுந்தன.ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது வாழைக்காய் தார் பிடித்து இன்னும் 1 மாதத்தில் காய் பறிக்க இருந்த நிலையில் தற்போது வீசிய சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்ததினால் ரூ5 லட்சம் வரை நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார் விவசாயி ரவி.
You must be logged in to post a comment.