Home செய்திகள் ஏடிஎம் மையத்தில் விதவிதமான ஏடிஎம் கார்டுகள்.ஏடிஎம் மையமா..கண்காட்சி மையமா..

ஏடிஎம் மையத்தில் விதவிதமான ஏடிஎம் கார்டுகள்.ஏடிஎம் மையமா..கண்காட்சி மையமா..

by mohan

ஏடிஎம் மையத்தில் விதவிதமான ஏடிஎம் கார்டுகள்.ஏடிஎம் மையமா..கண்காட்சி மையமா..உசிலம்பட்டியில் தனியார் ஏடிஎம் மையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் விதவிதமான ஏடிஎம் கார்டுகள் சொருகி வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பார்பட்டியில் (பேங்க் ஆப் இந்தியா) என்ற பெயரில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. ஜனநெருக்கடி மிகுந்த இடத்தில் ஏடிஎம் மையம் செயல்பட்டாலும் இந்த ஏடிஎம் மையம் மட்டும் எப்பொழுதும் வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் இந்த ஏடிஎம் மையத்தில் வாரத்தில் 3நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே பணம் நிரப்படுவார்கள் என கூறப்படுகிறது. நிரப்பபட்ட 24மணிநேரத்தில் பணம் தீர்ந்துவிடுவதால் அதற்கு பின்பு இயந்திரத்தில் போதிய பணம் இல்லை என தெரிவிக்கப்படுவதை தொடர்ந்து ஏடிஎம்க்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப செல்வர்.

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வருபவர்கள் பணம் எடுக்கும் விதம் தெரியாமலும், பணம் இல்லை என இயந்திரம் கூறிய பிறகும் ஒருசிலர் சேட்டைக்காகவும், மது போதையிலும் தங்களது ஏடிஎம்கார்டை இயந்திரத்தில் சொருகி பார்ப்பார்கள். ஒருமுறை சொருகினால் பரவாயில்லை, இரண்டு,மூன்று முறை சொருகும் போது அவர்களுடைய ஏடிஎம்கார்டு இயந்திரத்திலேயே மாட்டிகொள்கிறது. இதனை சரிசெய்ய யாரை அழைப்பது என தெரியாதவர்கள் இயந்திரத்திலேயே கார்டை விட்டுசெல்கின்றனர். மேலும் இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளியும் இல்லை. அந்த நேரத்தில் பணம் எடுக்கவருபவர்கள் இயந்திரத்தில் சிக்கி இருக்கும் ஏடிஎம் கார்டை எடுத்து உள்ளே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் அந்த ஏடிஎம் கார்டை சொருகி விட்டு செல்கின்றனர். ஒருசில நேரங்களில் பணம் நிரப்ப வரும் பணியாளர்கள் இயந்திரத்தில் மாட்டியிருக்கும் ஏடிஎம்கார்டை எடுத்து பலகையில் மாட்டிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் கடந்த 3மாதங்களாக நடந்து வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதே போல் நடைபெற்று வரும் சம்பவத்தினால் 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் பலகையில் மாட்டியவாறே காட்சியளிக்கிறது. இதனால் ஏடிஎம்மிற்குள் நுழைபவர்கள் விதவிதமான ஏடிஎம் கார்டுகளை பார்த்து பிரமித்துப் போகின்றனர்.

இந்த பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை உசிலம்பட்டியில் இல்லாததால் பணம் நிரப்ப வரும் வங்கிப்பணியாளர்களிடம் புகார் தெரிவித்தாலும் சம்பந்தப்பட்ட ஏடிஎம் வங்கி நிர்வாகமும் இது குறித்து எந்த பதிலும் தெரிவிக்காததால் பலகையில் கார்டுகள் இருந்த வண்ணமே உள்ளது. அதிலிருந்த ஏடிஎம் கார்டுகளில் அனைத்து வகையான வங்கிகளை சேர்ந்த ஏடிஎம் உள்ளது. இந்த கார்டுகள் அனைத்தும் 2025,2024,2022 வரை வேலிடிட்டி உள்ள கார்டுகள் ஆகும்.இந்த ஏடிஎம் கார்டுகளை கேட்டு யாரும் வராததால் நாளுக்கு நாள் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது.இப்படி பல வகையான ஏடிஎம் கார்டுகளை பலகையில் மாட்டிவிட்டு செல்வதால் எந்த மாதிரியான விபரீதம் நடக்கும் என தெரியாத மக்களால் ஏடிஎம் பணமோசடியில் ஈடுபடும் மோசடிக்காரர்களுக்கு பொதுமக்களே ஒரு வாய்ப்பை உருவாக்கி விட்டுள்ளதாகத் தெரிகிறது. இது போன்று விபரீதம் ஏதேனும் நடக்கும் முன் ஏடிஎம்கார்டுகளை எடுத்து அதன் நம்பர் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்தால் பல சிக்கல்கள் தடுக்கப்படும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com