ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் (பன்னீர்செல்வம் அணி) உரிமை மீட்புக்குழு சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் ராமநாதபுரம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் தலைகாய சிகிச்சை மற்றும் போதிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவசதிகள் இல்லாததால் நேயாளிகள் மதுரை அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். தலைகாய சிகிச்சைக்கு தேவையான மருத்துவர்களையும் , மருந்துகளையும் வழங்கவேண்டும் மேலும் மாலைநேரத்தில் மருத்துவர்கள் வருவதில்லை இருதய எக்கோ பிரிவு 20 நாளைக்கு ஒரு முறை செயல்படுகிறது என கூறி கண்டன கோஷம் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரிமை மீட்புக்குழுவினர் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.