Home செய்திகள் உலகப் புத்தக நாள் இணையவழி கருத்தரங்கம்;நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் அனைவருக்கும் அழைப்பு..

உலகப் புத்தக நாள் இணையவழி கருத்தரங்கம்;நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் அனைவருக்கும் அழைப்பு..

by mohan

உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 நாளை நெல்லை அரசு அருங்காட்சியகம், திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் இணையவழியில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.இந்த கருத்தரங்கிற்கு, அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்குகிறார். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் ம.கவிதா வரவேற்புரை வழங்குகிறார். நெல்லை மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தொடக்கவுரை ஆற்றுகிறார். “புத்தகம் பேசுகிறது”என்ற தலைப்பில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் மேனாள் நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் முனைவர் ந.இராமச்சந்திரன் கருத்துரை நிகழ்த்துகிறார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா நன்றியுரை வழங்குகிறார். ஏப்ரல் 23-அன்று மாலை 5.00 மணிக்கு இணையவழி ஜூம் செயலியில் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கூட்ட அடையாள எண்:835 8877 2845, நுழைவு எண்:707 338 வழியே அனைவரும் இணையலாம். உலகப் புத்தக ஆர்வலர்கள் அனைவரும் இணைய வருமாறு நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி அழைப்பு விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com