Home செய்திகள் திருப்பரங்குன்றம் உண்டியல் ஏப்ரல் மாத வருவாய் 22,62,217 ரொக்க பணம், 120 கிராம் தங்கமும் 1 கிலோ 500 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் உண்டியல் ஏப்ரல் மாத வருவாய் 22,62,217 ரொக்க பணம், 120 கிராம் தங்கமும் 1 கிலோ 500 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

by mohan

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி திருக்கோயிலில் (ஏப்ரல்) பங்குனி மாதத்திற்கு பக்தர்கள் அளித்த காணிக்கை, இன்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது.இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய்.22, லட்சத்து 62 ஆயிரத்து 217 ரூபாய் ரொக்கமும், தங்கம் 120 கிராம், வெள்ளி 1 கிலோ 500 கிராம் என உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் பிரதி மாதம் எண்ணப்படுவது வழக்கம்.தற்போதைய ஏப்ரல் (பங்குனி ) மாதத்திற்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணத்தை கோயில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர்கள் அனிதா ஆகியோர் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டத்தில் பணம் ரூ.22 லட்சத்து, 62ஆயிரத்து 217 ரூபாய், தங்கம் 120 கிராம், வெள்ளி 1 கிலோ 500 கிராம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்களும் ஈடுபட்டிருந்தது குறிப்பிடதக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com