Home செய்திகள் புளியங்குடியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..

புளியங்குடியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..

by mohan

புளியங்குடியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.கவை சேர்ந்த கல்யாணராமன், நபிகள் நாயகத்தை பற்றியும், அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கல்யாணராமனை கண்டித்து பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பாஜகவை சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி, தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய கட்சிகள் (பாப்புலர் ஃப்ரண்ட், தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வஹ்தத் இஸ்லாமி ஹிந்த், எஸ்டிபிஐ, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மமக, மஜக, அத்தக்வா) ஒருங்கிணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை மையப்படுத்தி கண்டன உரைகளும், கோஷங்களும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போன்று கடையநல்லூரில் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும்.சமூக நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும். கல்யாணராமன் போன்றவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.மேலும் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள்,அரசியல் கட்சிகள் சார்பில் கல்யாணராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!