Home செய்திகள் குலையநேரி கிராமம் சாக்கடையில் மிதப்பதாக கனிமொழி எம்பி பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றச்சாட்டு..

குலையநேரி கிராமம் சாக்கடையில் மிதப்பதாக கனிமொழி எம்பி பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றச்சாட்டு..

by mohan

கனிமொழி எம்.பி தென்காசி மாவட்ட பகுதிகளில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில், குலையநேரி கிராமம் முழுவதும் சாக்கடையால் நிரம்பி வழிவதாக கனிமொழி எம்பி பங்கேற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரி கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கோசத்துடன் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.பி தனுஷ் குமார், ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, மாநில விவசாய அணி அப்துல்காதர், ஒன்றிய செயலாளர் செல்லதுரை, இளைஞரணி ஐவேந்திரன் தினேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் செல்வகுமார் வரவேற்றார்.மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி எம்பியிடம் குலையநேரி கிராமத்திலுள்ள அனைத்து தெருக்களிலும் சாக்கடை நிரம்பி வழிகிறது.துப்புரவு பணிகள் சரியாக நடைபெறாததால் தங்கள் குழந்தைகள் நோய்வாய் படுவதாகவும், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து நோய்களிலிருந்து பொது மக்களை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.மேலும் அரசு பள்ளியை பன்னிரண்டாம் வகுப்புவரை தரம் உயர்த்த வேண்டும் எனவும், பள்ளியை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும், தினமும் 3 குடம் குடிதண்ணீர் மட்டுமே வருகிறது எனவே தேவையான அளவிற்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தனியார் நிதி நிறுவனங்களிடம் சிக்கியுள்ள பீடி சுற்றும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தீர்வு காணவேண்டும் என்றும், சரியாக குடிமராமத்து பணிகள் நடைபெறாததால் மழை நீர் கூட குளத்தில் தேங்கவில்லை.மக்கள் வரிப்பணம் வீண் ஆகியுள்ளது. கருப்பாநதி அணையிலிருந்து குலையநேரி குளத்திற்கு தண்ணீர் திறந்து விட நேரடி வாய்க்கால் ஏற்பாடு செய்து விவசாயிகளை வாழ வைக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு வீராணம் முகமது, திருமலைக்கணி, நகர செயலாளர் மாறன், ராமச்சந்திரன், பிரேம்குமார், கொடி கோபால், நிர்வாகிகள் வெல்டிங் மாரியப்பன், முருகன், மணி, ஆறுமுகம், குமார், சந்திரன், வைரவன், ராஜா, கணேசன், அப்துல் ரசாக், அமானுல்லா முகமது முஸ்தபா, ஜோதிடர் தங்க இசக்கி மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com