Home செய்திகள் நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..

நெல்லையில் பொதுமக்களை அச்சுறுத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..

by mohan

நெல்லை டவுன் மற்றும் பேட்டை பகுதிகளில், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, பொது மக்களை அச்சுறுத்தி வந்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாநகரம் டவுன் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரியான, செபஸ்தியர் கோயில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சுடலை (எ) சிவா என்பவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ள நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரியை, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மற்றும் நெல்லை பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் ஐயப்பன் மீது கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரிகளை, நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன், டவுன் உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார், டவுன் காவல் ஆய்வாளர் இராமேஸ்வரி, பேட்டை காவல் ஆய்வாளர் வேல்கனி, ஆகியோரின் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக்.மோ டாமோர் இ.கா.ப உத்தரவின் படி, டவுன் காவல் ஆய்வாளர் இராமேஸ்வரி மற்றும் பேட்டை காவல் ஆய்வாளர் வேல்கனி ஆகியோர் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 28.12.2020 ம்- தேதியன்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com