நெல்லை மாநகரில் சேறும் சகதியுமாக காணப்படும் முக்கிய சாலைகள்…

நெல்லையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகின்றது. நெல்லையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்ட மணல் கொண்டு மட்டும் மூடப்பட்டுள்ளன. தார்சாலை அமைக்கவில்லை. இதனால் வெயில் அடிக்கும் நேரங்களில் வாகனங்களில் வரும் போது புழுதி அதிகமாக பறப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது

.நெல்லையில் தற்போது மழை அதிகமாக பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. சாலையில் மழை நீர் தேங்கி கிடப்பதால் பள்ளம் ஏதும் தெரியாமல் வாகனங்களில் வருபவர்கள் அவ்வப்போது விழுந்து விடுகின்றனர்.கேரளா மாநிலம் மற்றும் தென்காசி பாபநாசம் போன்ற பகுதிகளில் இருந்து நெல்லைக்குள் நுழையும் பகுதியான டவுண் குற்றால சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காணலாம்.நெல்லை மாநகர பகுதியின் முக்கிய சாலைகளை விரைந்து சரி செய்ய பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்