
கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் 18.11.2020 அன்று மாலை அறக்கட்டளை நிறுவனர் M.K.E.உமர் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மின்ஹாஜ் பள்ளி ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது ஆலிம் இறைமறை வாசித்து துவங்கி வைத்தார். முகம்மது சிராஜுதீன் வரவேற்றார். தலைமை உரையாற்றிய எம்.கே.இ.உமர், கீழக்கரையில் மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிபணிந்து விடாமல் தடுக்கும் பொறுப்பு அவரவர்களின் பெற்றோர்களுக்கு உண்டு என்றும் போதை குறித்த தீங்கினை அவ்வப்போது எச்சரிக்க வேண்டிய கடமை சமூக நல அமைப்புகளுக்கு உண்டு என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீழக்கரை காவல்துறை ஆய்வாளர் S.விஸ்வநாதன், பிள்ளைகளிடம் நற்பண்புகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களிடம் உள்ளதாகவும் தம் பிள்ளையின் நடவடிக்கையில் ஏதேனும் மாறுதல் தெரிந்தால் உடனே அதுகுறித்து விசாரித்து அவர்களை நல்வழியில் நெறிப்படுத்த வேண்டிய கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு என்றார்.
நிகழ்ச்சியில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கீழக்கரை ரோட்டரி கிளப் தலைவர் மூர் ஹஸனுதீன், சமூக நல ஆர்வலர்களான ஹமீதுபைசல், தாஜுல் அமீன், பேங்க் மரிக்கா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மஜ்மஉல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை தலைவர் நூருல்ஜமான் நன்றி கூறினார். கீழை ஜஹாங்கீர் அரூஸி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
You must be logged in to post a comment.