நரிக்குறவர் இறந்த உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு : சமரசம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த சிந்தாமணி இறந்ததையெடுத்து அவரது உடலை பில்லேரிஏரி பகுதியில் புதைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனடியாக வட்டாட்சியர் காமாட்சி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை இன்றி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.