Home செய்திகள் நெல்லை தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்பு..

நெல்லை தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர்கள் பொறுப்பேற்பு..

by mohan

திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் பெண் ஆட்சியராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து பொறுப்பு வகித்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டு இவருக்கு பதில், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப் பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் 37-வது மாவட்ட ஆட்சித் தலைவராக வி.விஷ்ணு 15.11.2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர் ஏற்கெனவே, சேரன்மகாதேவியில் சார் ஆட்சியராகவும், கன்னியாகுமரி மாவட்டம் இனயம் துறைமுகத்தை உருவாக்குவதற்கான சிறப்பு அலுவலராகவும் பணிபுரிந்தவர்.மேலும், தென்காசிதிருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தென்காசி மாவட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 22-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதுமுதல், தென்காசி மாவட்ட முதல் ஆட்சியராகவும், அதற்கு முன் சிறப்பு அலுவலராகவும் பொறுப்பு வகித்த ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக தென்காசி மாவட்ட புதிய ஆட்சியராக டாக்டர் ஜி.எஸ். சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள சமீரன் 15.11.2020 ஞாயிற்றுக் கிழமை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து தென்காசி மாவட்டத்தின் இரண்டாவது மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.சமீரன் ஏற்கனவே மீன்வளத்துறை இயக்குநராக இருந்தவர்.புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com