
நெல்லை மாவட்டம் டவுணில் இருந்து பேட்டைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. அப்பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.நெல்லை டவுண் பகுதியிலிருந்து புதுப் பேட்டை, பழைய பேட்டை மார்க்கமாக செல்லும் வாகனங்களும் பேட்டை மார்க்கமாக டவுணுக்கு வரக்கூடிய வாகனங்களும் இங்குள்ள காட்சி மண்டபத்தை கடந்துதான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.காட்சி மண்டபத்தின் மத்திய பகுதி அடைக்கப்பட்டுள்ளதால் இரு புறத்திலிருந்து வரும் வாகனங்கள் ஓரமாகத்தான் செல்ல வேண்டிய நிலையில்,இந்த ஓரப் பகுதியில் பெரிய அளவில் பள்ளமாக இருப்பதால் இந்த இடத்தை வாகனங்கள் சிரமத்துடன் கடக்க வேண்டியதுள்ளது.மேலும் நடந்து செல்லும் பொதுமக்களும் தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலையும் உள்ளது.ஆதலால் இந்த பாதையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீர்படுத்திதர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்கம் சார்பில் சமூக ஆர்வலர் எம்.முஹம்மது அய்யூப் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.