நெல்லையில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க நிர்வாகக்குழுக் கூட்டம்-புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு..

நெல்லையில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க நிர்வாகக்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சேர்மன் எஸ்.ஆர். அனந்தராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்வில் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளாக சேர்மன் எஸ்.ஆர். அனந்தராமன், துணை சேர்மன் அ.பாலசுப்பிரமணியன், பேராசிரியை உஷாதேவி, நல்லாசிரியர் ஹெச். நடராஜன், பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர். கோ. கணபதி சுப்ரமணியன், துணைச் செயலாளர்கள் டாக்டர் காஞ்சனா சுரேஷ், சு.முத்துசாமி, காஞ்சனா விஜயன், மகளிரணி செயலாளர்களாக பேராசிரியை சொர்ணலதா அருணாச்சலம், பேராசிரியை ஜெயமேரி, பொருளாளராக வழக்கறிஞர் ஜி. முருகமுரளிதரன், கௌரவ ஆலோசகராக பெட்காட்.க. வெங்கடாசலம், ஒய்வு பெற்ற அரசு அலுவலர்.மணிலால், வழக்கறிஞர்.ஜே.எஸ். கண்ணன்.இயக்கத்தின்,இயக்குனர்களாக, சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஆசிரியர் முனைவர்.கா. சரவணகுமார், உணவு துறை இயக்குனராக நூலகர், முத்துகிருஷ்ணன், கல்வித்துறை, இயக்குனராக முன்னாள் தலைமையாசிரியர் .A .ஆறுமுகம், சாலை பாதுகாப்பு இயக்குனராக பேராசிரியை.இரா. அனுசியா, சுகாதாரத் துறை இயக்குனராக டாக்டர்.ஆசுகவி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இந்த நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சையில் சிறப்பான செயல்பாட்டிற்கு தமிழக அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிதாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 நிறைவேற்றிய மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முக கவசம் சமூக இடைவெளியோடு பொதுப் போக்குவரத்து தொடங்க மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இத்தீர்மானங்கள் நிறைவேற்றி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..