நெல்லையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு…

நெல்லை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அருகே திடீரென கார் தீப்பற்றி எரிந்தது.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அருகே 21.08.20 இன்று காலை நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பொதுமக்கள் உடனடியாக பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..