Home செய்திகள் சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் 1600 ஏழை எளிய குடும்பங்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவி..

சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் 1600 ஏழை எளிய குடும்பங்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவி..

by mohan

சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1600 ஏழை,எளிய,நலிவடைந்த குடும்பங்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுரண்டை பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக வர்த்தக அணி சார்பில் 1600 குடும்பங்களுக்கு மாநில வர்த்தக அணி துணை தலைவர் அய்யாத்துரை பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சுரண்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கிறிஸ்துவர்கள், சலவைத் தொழிலாளர்கள், மற்றும் கார், ஆட்டோ  ஓட்டுனர்கள், நலிந்தவர்கள்‌,ஏழை எளிய மக்கள் என 602 குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு அடங்கிய தொகுப்பு, ஏழாவது வார்டுக்குட்பட்ட  குருங்காவனத்தில் 200 குடும்பங்களுக்கும்,கீழ வெள்ளகால் ஊராட்சிக்குட்பட்ட துவரம்காட்டில் 300 குடும்பங்களுக்கும், இனாம் வெள்ளகால் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 300 குடும்பங்களுக்கும், ராஜபாண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 200 குடும்பங்களுக்கு என மொத்தம் 1602 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், கிளை கழகச் செயலாளர்  வெள்ளத்துரைபாண்டியன், ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், ஊராட்சி பிரதிநிதி மணி, ஊராட்சி செயலாளர் ஜெயராஜ், ஊராட்சி செயலாளர் மாணிக்கராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வேல்சாமி பாண்டியன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் சக்தி, செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆ.ரவிசங்கர், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன், புனித அந்தோணியார் தேவாலயம் பங்குத்தந்தை லாரன்ஸ், ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்டீபன் சத்யராஜ் ,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜேம்ஸ், பேரூர் துணைச்செயலாளர் பூல்பாண்டியன், சபர்நிஷா, பேரூர் பொருளாளர் ஜெயராஜ், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம், நடுவை ஊராட்சி செயலாளர் சங்கர், குலையநேரி ஊராட்சி செயலாளர் திருமலைக்குமார், தகவல் தொழில் நுட்ப அணி செல்சிட்டி அல்லாபிச்சை, அருணா, முகமது ஆரிப் பிரதிநிதி கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் அன்னபிரகாசம் பட்டுராஜ்,முன்னாள் பேரூராட்சி கழகச் செயலாளர் ஷேக் முகைதீன், ஒன்றிய துணைச் செயலாளர் வாசுதேவன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இசக்கி துரை, ஒன்றியப் பிரதிநிதி பேச்சிமுத்து, சாமித்துரை, கலைஞர் கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆகாஷ் பாண்டியன், சங்கர், இடைகால் செல்லத்துரை, தனலட்சுமி மாரியப்பன், முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!