Home செய்திகள் நெல்லை,தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் கைது-3 கிலோ தங்க நகைகள் மீட்பு

நெல்லை,தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் கைது-3 கிலோ தங்க நகைகள் மீட்பு

by mohan

தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற 165 க்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கொள்ளையர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தென்காசி அருகில் உள்ள கடையம்  புங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 35)  இவரது தம்பி சுரேஷ்  (வயது 32) இவர்களது தாய்  பொன்னம்மாள் (வயது 60) பொன்னம்மாளின்  கணவர் துரை இவர்கள்  4 பேர்களும் புங்கம் பட்டியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டியுள்ளனர். சமீபத்தில் விவசாய நிலங்களை வாங்கி கிணறு தோண்டி பம்புசெட் மூலம் விவசாயம் செய்து வருவது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் நான்கு பேர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி திருநெல்வேலி மதுரை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 165 கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு நீண்ட காலமாக போலீசார் கைகளில் சிக்காமல் மறைந்து வாழ்ந்து வந்த கொள்ளை கும்பலை கைது செய்ததோடு 3 கிலோ தங்க நகைகளை மீட்கப்பட்டுள்ளது. மீட்டு தந்த தென்காசி டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன், தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் சாம் சுந்தர், தனிப்பிரிவு தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகியோரை தென்காசி எஸ்பி சுகுணா சிங் வெகுவாக பாராட்டினார்..கைது செய்யப்பட்ட நான்கு பேர்களும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!