Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பாம்பனில் பத்தாயிரத்திற்கு விலை போன ருசி மிகுந்த ‘நெய் மீன்’ சீலா

பாம்பனில் பத்தாயிரத்திற்கு விலை போன ருசி மிகுந்த ‘நெய் மீன்’ சீலா

by keelai

இராமேஸ்வரம் தீவு மன்னார் வளைகுடா பகுதிகளில் பலதரப்பட்ட சீலா மீன் வகைகள் மீனவர்களின் வலைகளில் கிடைத்து வருகிறது. அவற்றுள் நெய் மீன் என்று பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் சீலா மீன் மட்டுமே அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. கீழக்கரை பகுதி மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் மீன் வகையறாக்களின் பட்டியலில் இந்த நெய் மீன் சீலா முதலிடத்தில் இருக்கிறது.

நம் பகுதி மீனவர்களின் வலைகளில் சிக்கும் சீலா மீன் வகைகளுள் ஓலை போன்று நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கக்கூடிய ஓலைச் சீலா, கட்டையாக உடல் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும் கட்டையஞ் சீலா, உருண்டை வடிவத்தில் இருக்கும் குழிச் சீலா,

உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும் வாலில் மட்டும் மஞ்சள் நிறத்திலும் கரை ஓரங்களில் வாழக்கூடிய கரைச் சீலா, கொழுப்பு அதிகமாகவும், சாப்பிடுவதற்கு சுவை அதிகமாகவும் உள்ள நெய் சீலா, மற்றும் வெள்ளுராச் சீலா, லோப்புச் சீலா, நாய்க்குட்டி சீலா என எட்டு வகையான சீலா மீன்கள் காணப்படுகின்றன.

இதில் நெய் மீன் சீலா மட்டுமே அதிகபட்சம் கிலோ ரூ. 500 முதல் 700 வரை எடை வாரியாக விற்கப்படுகிறது. நெய் மீன் சீலா தவிர ஏனைய ஏழு விதமான சீலா மீன்களும் கருவாடாக பதப்படுத்தி தமிழகம் மற்றும் கேரளா முழுவதும் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர் வலையில் நேற்று சிக்கிய 20 கிலோ எடையுள்ள நெய் மீன் சீலா ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com