கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக சிறப்பு இரவு நேரத் தொழுகை..

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் மிகவும் கண்ணியமிக்க நாட்களாகும். ஓரு மனிதன் இறைவனிடத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையாக கீழக்கரையில் பல் வேறு அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக கடந்த பல வருடங்களாக சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) , தெரு மக்கள் இஸ்லாத்தின் இறைத்தூதர் வழியில் தொழுகை முறையை அமைத்துக் கொள்ளும் வகையில் தினசரி தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த ரமலான் மாதத்தில் அனைவருக்கும் பயன் பெறும் வகையில் வடக்குத் தெரு சமூக நல அமைப்பின் மதரசா வளாகத்தில் ரமலான் மாதத்திற்கான சிறப்புத் தொழுகயும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் அனைவரும் பயன்பெறும் விதமாக இரவு நேரத் தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு தினமும் பல சகோதரர்கள் தொழுகையில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..

3 Comments

  1. நின்று தொழுபவர்களும், செய்தி பகிர்ந்தவர்களும் சொந்தங்களே, இருந்தும் கேட்கிறேன்.
    11 பேர் தொழுவதற்குக்கு ஏன் தனியாக தொழுகை அதுவும் வெட்டவெளி மொட்ட மாடியில்? **உங்களுக்கு பிடித்த** அருகிலுள்ள பள்ளிகளை தேர்ந்தெடுக்காததேன்?
    ஒவ்வொரு ரமலானுக்கும் இப்படி பிரிந்து துண்டுகளாக சிதறும் நம் ஊர் மக்கள் நிலைமையை நினைத்து வருந்துகிறேன்.

    • அடக்கஸ்தலத்தை வணக்கஸ்தலமாக
      ஆக்கினால் மக்கள் எவ்வாறு தொழுகைக்கு அருகிலுள்ள பள்ளியை தேர்ந்துதெடுப்பார்கள்….

      • அது தவிர்த்து, அருகிலுள்ள வேறு சில பள்ளிகளிலும் தொழுகை நடப்பதாக அறிகிறேன்.

Comments are closed.