
கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களுக்கான சிறப்பு இரவு நேரத் தொழுகை நடைபெற்றது. கியாமுல் லைல் எனும் இரவு நேரத் தொழுகை கீழக்கரை தெற்கு தெரு கிளை, வடக்குத் தெரு கிளை, நடுத்தெரு மரதசா, சாலைத் தெரு, கிழக்குத் தெரு கிளை, 500 ப்ளாட் கிளை ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த சிறப்புத் தொழுகைக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆண்களும் பெண்களும் ஆவலுடன் கலந்து கொண்டார்கள்.
இதுபற்றி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகியிடம் விசாரித்த பொழுது இந்த வருடம் இரவுத் தொழுகைக்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக கலந்து கொண்டார்கள். மேலும் பல இடங்களில் ஆண்களு;கு ஒதுக்கிய இடத்திலும் பெண்களுக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றார்.
மேலும் இந்த இரவுத் தொழுகை கேபிள் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
You must be logged in to post a comment.