
கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன்பு கடற்கரை ஓரத்தில் சிமென்ட் கற்கள் மூலம் நடைபாதை அமைக்க அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகளும் துரிதமாக தொடங்கப்பட்டது. இச்சாலை கீழக்கரை கலங்கரை விளக்கம் பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இச்சாலையின் பணிகள் முழுமையடைந்து விட்டால் நிச்சயமாக கீழக்கரை மக்களுக்கு காற்று வாங்குவதற்கும் மாலை நேரப் பொழுதை இனிமையாக கழிப்பதற்கும் ஏற்ற இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
இந்த கடற்கரை சாலையில் வரும் பொதுமக்கள் நடப்பதற்கென பிரத்யேக சாலையும், கடற்கரை நோக்கி அமர்வதற்கான இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வரும் பொதுமக்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும் என்று அடிக்கல் நாட்டிய சமயத்தில் கீழக்கரை ஆணயைர் தெரிவித்து இருந்ததார். அதே போல் உபயோகமில்லாமல் இருக்கும் ஹைமாஸ் விளக்குகளும் பொறுத்தப்படும் என்று கூறியிருந்தார் அதன் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் அந்தப்பணிகளும் நிறைவேறும் பட்சத்தில் இந்த கண்கவர் கடற்கரை சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வந்து விடும். ஆனால் இந்த சாலை முழுமையாக பயன்பாட்டுக்க வரும் முன்பே சில நபர்கள் மது அருந்திக் கொண்டிருப்பதை காண முடிந்தது.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் விசாரித்த பொழுது அவர்கள் கூறியதாவது இந்த பழைய பஸ் நிலையப் பகுதி மற்றும் பழைய பெட்ரோல் பங்க் பகுதிகளில் இரவு நேரங்களில் குடிகாரர்களின் தொல்லை அதிகமாக உள்ளது பெண்கள் அந்தப் பகுதியாக சென்றால் கேலி செய்யப்படுகிறார்கள் மேலும் முகம் தெரியாத நபர்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது அதை விட இந்தப் பகுதிகளில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களும் சமூக விரோத நபர்களால் விற்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல்களை கூறினார்கள்.
பல லட்சம் ரூபாய்; செலவில் உருவாகும் இந்த சாலையை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனில் குடிகாரர்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் பொதுமக்கள் நிம்மதியுடன் இப்பகுதிக்கு செல்ல முடியும். காவல்துறையும் நகராட்சியும் நடவடிக்கை எடுக்குமா??
You must be logged in to post a comment.