கீழக்கரை வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் முடிகளை ஒழுங்குபடுத்த நகராட்சி ஆணையர் ஆய்வு..

கீழக்கரையில் உள்ள வடக்குத்தெரு தைக்கா அருகில் உள்ள கால்வாய் மூடிகள் உடைந்த நிலையில் பல மாத காலங்களாக அபாயகரமான நிலையில் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக எழுந்த புகாரை அடுத்து நகராட்சி ஆணையர் வசந்தி இன்று நேரடி ஆய்வு செய்து விரைவில் சரி செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் நகரில் உள்ள பல்வேறு குறைகளை ஆணையர் வசந்தி நேரடியாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பல்வேறு மக்கள் குறைகளை கீழை நியூஸ் நிர்வாகம் நகராட்சி ஆணையரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.