இராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி தர்ணா..

சேலம் தொடங்கி சென்னை வரையிலான 8 வழி திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச்சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் எட்டுவழி சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் காவல்துறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மண்டல செயலாளர் கண். களங்கோ,மாவட்ட செயலாளர் பத்மநாபன் ,மாவட்ட தலைவர் நாகூர் கனி,தொகுதி செயலாளர் ராஜீ ,திருவாடனை தொகுதி செயலாளர் ராசா , கீழக்கரை நகர் செயலாளர் கீழை பிரபாகரன் ,நகர் துனை செயலாளர் யாசர் அரபாத் ,நகர் தலைவர் சுகுமார் மற்றும் திரளான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

#Paid Promotion