இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்க அமைப்பின் தலைவருக்கு மக்கள் நல்வாழ்வு இயக்க நண்பர்கள் வாழ்த்து!..

இராமநாதபுரம் நுகர்வோர் நல சங்க அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் பிரேம் சதீஷ் அவர்கள் உறுதிமொழி சான்று ஆணையாளர் அங்கீகாரம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு அவரது நண்பர் களும் நுகர்வோர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இராமநாதபுரம் மக்கள் நல்வாழ்வு இயக்க நண்பர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் கே.ஜெ.பிரவின் தலைமையில் நேரில் சந்தித்து மரக்கன்று வழங்கி வாழ்த்து கூறினர்.