சங்கரன்கோவிலில் தலைமைக்காவலருக்கு அரிவாள் வெட்டு..

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் ஸ்டேட் பேங்க் அருகில் தலைமை காவலர் மாரிமுத்து அரிவாளால் கை கால் ஆகிய பகுதிகளில் மர்ம நபர்களால் 01/03/2019 அன்று  சரமாரியாக வெட்டப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலர் மாரிமுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைமைக்காவலரை அரிவாளால் தாக்கிய இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாரிமுத்து முக்கூடல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

#Paid Promotion