பழனி அருகே ஆயக்குடியில் முன்விரோதம் காரணமாக பெருமாள் என்ற இளைஞருக்கு சரமரியாக அரிவால் வெட்டு காவல்துறை விசாரணை..

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி 7வது வார்டில் கோபாலகிருஷ்னன் மகன் பெருமாள் வயது 33 என்பவர் வசித்து வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி ஜீவிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.சம்பவமான நேற்று இரவு 7.00 மணியளவில் பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் எதிரே நின்று கொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக அங்கு மறைந்திருந்த ரமேஷ்,மதன்,கோபால் ஆகிய மூவரும் திடீரென பெருமாள் மீது அரிவாலால் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் பெருமாள் மண்டையில் சரமாரியாக வெட்டு விழுந்தது. மேலும் ரமேஷ் என்பவர் பெரிய கரணைக் கல்லால் பெருமாளின் கைகால் உடையும்வரை தூக்கிபோட்டுள்ளார். பெருமாளின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே இந்த மூன்று பேரும் இரண்டு சக்கர வாகணத்தில் ஓடிவிட்டனர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த பெருமாளை உடனடியாக தணியார் வாகணத்தின் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் குற்றவாளிகளான ரமேஷ், மதன், என்பவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது ஆயக்குடி காவல் நிலையத்தில் தேடப்படும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது..

பழனி செய்தியாளர்:- ரியாஸ்

#Paid Promotion