தாயை அவதூறாகப் பேசிய நண்பரை வெட்டிக்கொன்ற மகன்!…

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள கண்ணங்கட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலவன் (வயது 22). இவர் தூத்துக்குடியில் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். 

தாளமுத்துநகர் அருகில் உள்ள வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 22).  நண்பர்களான வேலுவனும் கண்ணனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார்கள். இந்நிலையில், தாய்நகர் அருகில் உள்ள உப்பளப் பகுதியில் நேற்று இரவு மது அருந்திக் கொண்டிந்தனராம். அப்போது, மதுபோதையில் வேலவன், கண்ணனின் தாயைப் பற்றி அவதூறாக கப் பேசினாராம். இதனால், ஆத்திரம் தாளாத கண்ணன், வேலவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இன்று, கண்ணன் போலீஸில் சரண் அடைந்துவிட்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#Paid Promotion