56
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி நரசிங்கபுரத்தில் இன்று காலை அய்யப்பன் என்பவரும் இவரை சார்ந்தவர்களும் முன்விரோதம் காரணமாக செல்வம் (வயது 50) என்பவரையும் இவரது மகனையும் அரிவாளால் வெட்டியதால் செல்வம் என்பவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரது மகனை அவசர ஊர்தியின் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அய்யப்பன் என்பவர் கொலையான செல்வம் என்பரின் அக்கா மகன் என்பதும் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.