நெடுந்தீவு அருகே எல்லை தாண்டிய தமிழக மீனவர் 27 பேர் கைது…

தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் மீன்பிடிக்கச் சென்றனர் இவர்களில் பழனி என்பவரது படகில் சென்ற வில்லாயுதம்(50), பாலா(45),  தரன்(19), கங்கைமுத்து(42), விக்கி(20), முத்துக்கனி(25), ராசூ(35), பாலா (42). அதே போல் கிருஷ்ணன் என்பவரது படகில் சென்ற குமரன்(27), சந்தானமாரி(39), பஞ்சநாதன்(50), ராஜாராம்(41), காளிதாஸ்(35), கருப்பையா(40). மேலும் ஆறுமுகம் என்பவரது படகில் சென்ற கிருஷ்ணண் (47), லோகமுத்து (65), பாலா (43), முத்துமாரி (28), ராக்கு.(58, நம்புதாளை அப்தாஹிர் பாசிப்பட்டினம் அப்தாஹீர்(41). தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தைச் சேர்ந்த இரண்டு பேர்,  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினித்தைச்சேர்ந்த 3 பேர் உட்பட 27 பேர் நான்கு நாட்டுப்படகுகள்,  புதுக்கோட்டை மாவட்டம் செண்பகத்மகாதேவன் பட்டினம் கடற்கரையிலிருந்து ஆக.,9ல் கூரல்மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்களை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. காரைநகர் கடற்படை முகாமில் வைத்துள்ளனர். யாழ்பாணத்திலுள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இன்று மதியம் ஒப்படைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுகின்றனர் |