64
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பஜாரில் ரோட்டோரம் நடந்து சென்ற பெண் மீது என். என்.எல் பஸ் மோதியதில் (ஜெயலெட்சுமி) படுகாயம் அடைந்தார். முதுகுளத்தூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலெட்சுமி (47) இவர் கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு ரோட்டோரம் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் நோக்கி வந்தஎன் என்எல் பஸ் ஜெயலெட்சுமி மீது மோதியதில் பின் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம்பட்ட ஜெயலெட்சுமியின் கணவர் கண்ணன் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்ன கன்னு உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியா வழக்குபதிவு செய்து என் என்எல் பஸ்ஸை பறிமுதல் செய்து டிரைவர் லாரன்சை கைது செய்தனர்.
You must be logged in to post a comment.