Home செய்திகள்உலக செய்திகள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபருக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட ஹவாலா பணம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கீழக்கரையில் சோதனை !

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபருக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட ஹவாலா பணம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கீழக்கரையில் சோதனை !

by Baker BAker

பெங்களூரு சிறையில் இருந்த பயங்கரவாதி ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்னையில் இருந்து ஒரு லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதன் தொடர்பாக பெங்களூரு என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று கீழக்கரை உள்ள இருவரது வீட்டில் சோதனை நடத்தினர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நசீர். இவர் சிறையில் இருந்த போது கைதிகளை மூளைச்சலவை செய்து பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்தார் என்ற வழக்கின் அடிப்படையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15ந்தேதி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நசீரின் வங்கி கணக்கிற்கு துபாயிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த ஹவாலா பணம் ஒரு லட்ச ரூபாயை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13ந்தேதி ஏடிஎம் மெசினில் டெபாசிட் மூலமாக நசீர் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணபரிமாற்றம் தொடர்பாக விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டதன் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை மண்ணடியில் கீழக்கரையைச் சேர்ந்த தமீமுல் ஆசிக் மற்றும் அல் முபீத் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமீமூல் ஆசிக் சென்னையில் உள்ள நகை கடையில் வேலை செய்து வருகிறார். அல் முபீத் சென்னையில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இந்த பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக அவர்கள் சொந்த ஊரான கீழக்கரை பருத்தி காரன் தெரு மற்றும் புதுத்தெரு ஆகிய இரு இடங்களிலும் உள்ள வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரி இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வீட்டில் எந்த முக்கிய ஆவணங்களும் கிடைக்காததால் ஒரு பென்டிரைவ் மற்றும் இருவரது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்றதாக அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!