Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வேலை வாய்ப்பு விழிப்புணர்வு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “வேலை வாய்ப்பு விழிப்புணர்வு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி…

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு இணையவழி கருத்தரங்கம் 23/06/2020 இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வை முகம்மது சதக் நிறுவனத்தின் சேர்மன் S.M.முகம்மது யூசுப் மற்றும் செயலாளர் S.M.H.சர்மிளா  ஒத்துழைப்புடன் கல்லூரி முதல்வர் Dr. A. R. நாதிராபானு கமால் வாழ்த்துரை வழங்கி இக்கருத்தரங்கிணை தொடங்கி வைத்தார்.

அரபித்துறைத் துறைத்தலைவர் M. ரெய்ஹானத்தில் அதவியா இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் அனைவரையும் வரவேற்கும் விதமாக IQAC ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி பயன்பாட்டியல்த்துறை துறைத்தலைவர் அன்வர் R.ஷாஹின்  வரவேற்புரை ஆற்றினார். அவரை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் M.மதுக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், இராமநாதபுரம்  “திறமைமிக்க மாணவர்கள் அனைவரும் முயற்சி செய்து மத்திய அரசின் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும்” என்று கூறி முக்கிய உரை ஆற்றினார். C.சந்திரன், மண்டல இணை இயக்குனர், மதுரை  “பட்டதாரி மாணவர்கள் அனைவரும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றின் வாயிலாக மத்திய மாநில அரசுகளின் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்றும், ‘தன்னார்வம் பயிலும் மாணவர்கள் வட்டம்’ என்ற ஒன்றை உருவாக்கி, அதில் இடம்பெறும் மாணவர்களுக்கு மத்திய மாநில அரசின் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை எடுத்துக் கூறுவதாக கூறி தலைமையுரையாற்றினார்”.

இக்கருத்தரங்கிற்குச் சிறப்புப் பேச்சாளர் M.கருணாகரன்,M.Sc (மனோதத்துவயியல்), அங்கிகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு ஆலோசகர்  “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கி, மற்றும் இரயில்வே துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது என்றும், அந்த தேர்வுகளை எழுதுவதற்கு இணையவழியில் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் தேர்வெழுதும் மாணவர்கள் எளிய முறை கணிதம், ஆங்கில இலக்கணம், பொதுஅறிவு போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தேர்வு குறித்த பயத்தை மனதிலிருந்து போக்க வேண்டும் என்று கூறி மாணவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளித்தும் சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் 100-க்கு மேற்ப்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஆங்கிலத்துறைத் துறைத்தலைவர் K. மெஹரூனிஸா நன்றியுரை வழங்கியதுடன் இக்கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!