Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தடை அமலில் இருக்கும் பொழுது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் சாமி தரிசனம்…..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தடை அமலில் இருக்கும் பொழுது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் சாமி தரிசனம்…..

by ஆசிரியர்

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை. அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டு ஆலயத்திலுள்ள விக்கிரகங்களுக்கு ஆறுகால பூஜைகள் நடைபெற்று வந்தது.

கடந்த வாரம் தமிழக அரசு ஆண்டு வருமானம் ரூபாய் 10 ஆயிரத்திற்கும் கீழுள்ள வழிபாட்டு ஸ்தலங்களை திறக்க அனுமதி அளித்தது. ஆனால் அதிக வருமானம் உள்ள மற்றும் அதிக கூட்டம் வரக்கூடிய திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த தமிழக துணை முதல்வர் மகனும் தேனி பாராளுமன்ற உறுப்பினருமான திரு ரவீந்திரநாத் குமார் தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தடை அமலில் உள்ள நிலையில் வழிபாட்டுத் தளங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில்  பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் திருக்கோவிலுக்கு சென்று சமூக இடைவெளி இல்லாமல் வழிபாடு நடத்திய சம்பவம் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!