Home செய்திகள் களிமண் பொம்மை உற்பத்தியாளர்களை வாழ்வாதாரம் காத்திட அரசு வழிவகை செய்யும். – நாடாளுமன்ற நிலை குழு தலைவரும்., MP கனிமொழி பேட்டி.

களிமண் பொம்மை உற்பத்தியாளர்களை வாழ்வாதாரம் காத்திட அரசு வழிவகை செய்யும். – நாடாளுமன்ற நிலை குழு தலைவரும்., MP கனிமொழி பேட்டி.

by ஆசிரியர்
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி அருகே மொட்டமலை பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசு சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் அமைக்கப்பட்டுள்ள பொம்மை உற்பத்தி நிலையத்தில்., நாடாளுமன்ற நிலைகுழு உறுப்பினர்கள் கொண்ட20 பேர் பார்வையிட்டு பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்களை நேரில் பார்த்து அவர்களை வாழ்த்தினார். மேலும்., நாடாளுமன்ற நிலை குழு தலைவர் என்ற முறையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை வாழ்த்தி அவர்கள் உற்பத்தி செய்த களிமண் பொம்மைகள் அனைத்தும் நன்றாக உள்ளதாக தெரிவித்தார். அங்கு பணியாற்றிய ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
காவேரி விவகாரம் தொடர்பாக செய்தியாளர் கேள்விக்கு நான் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இங்கு வந்துள்ளேன் அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கைவினைப் பொருள்கள் ஏற்றுமதிக்கு உதவிட வேண்டும் என உண்மை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்விக்கு.?
கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பொம்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட ஏற்றுமதி செய்ய வழிவகை செய்வதாகவும் உறுதியளித்தார்.
மழைக்காலங்களில் பொம்மை செய்வதற்கு மண் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு.?
மழைக்காலங்களில் அவர்களுக்கு தேவையான இடங்களில் மண் எடுப்பதற்கு அரசு வழிவகை செய்யும் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்லும்போது அங்கிருந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் மனோலித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட பிறகு காரில் ஏற முற்பட்டபோது அங்கு இருந்த தூய்மை பணியாளர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் காலில் விழுந்த நிகழ்வால் சுற்றி இருந்த நபர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. காலில் விழுந்த தூய்மை பணியாளர்களை எழுப்பி விட்டு அவர்களை தொட்டு வணங்கிய சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!