கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு கூட்டம்..

இன்று (09-03-2017) கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பள்ளி வளாகத்தினுள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அரசாங்க சிறப்பு மருத்துவர்கள் மகேஷ், வினோத், ராசிக்தீன், அருள்ராஜ் மற்றும் மவ்பியா ஆகியோர் கலந்து கொண்டு ரூபெல்லா, தட்டம்மை பற்றிய விழிப்புணர்வு உரையை வழங்கி, பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கத்தையும் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பள்ளியில் அடுத்த வாரம் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை முகைதீனியா பள்ளி கல்விக் குழு துணைத் தலைவர் MM. முகைதீன் இபுராஹிம் வழங்கினார், கல்விக் குழு இணைச் செயலாளர். அகமது மிர்சா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் வரவேற்புரையை பள்ளியின் துணை முதல்வர். சேதுபதி வழங்கினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அடுத்த வருடத்தின் செயல் திட்டங்களை பள்ளி முதல்வர் பாதுஷா வழங்கினார். நிகழ்ச்சியின் நன்றியரையை பொருளாதார ஆசிரியை புவனா வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.