23
கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை வரவேற்புரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து டாக்டர்.ராசிக்தீன் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவிற்கு MMS முகைதீன் இபுறாகீம் தலைமை தாங்கினார். விழாவிற்கு முதன்மை விருந்தினராக தாசில்தார கலந்து கொண்டார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க தலைவர் Dr.கபீர் சிறப்புரையாற்றினார். மேலும் ஜாஹிர் ஹூசைன் ஹாஜி, யூசுப் ஆலிம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். மாணவர்களின் கலை திகழ்ச்சிகளோடு விழா இனிதே நிறைவுபெற்றது
You must be logged in to post a comment.