Home செய்திகள் உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் இணைந்து உலகத் தலைவர்களைப் போல் மாதிரி ஜி.20 மாநாடு..

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் இணைந்து உலகத் தலைவர்களைப் போல் மாதிரி ஜி.20 மாநாடு..

by ஆசிரியர்

இந்தியாவில் வரும் 9 10 ஆகிய தேதிகளில் புதுடில்லியில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு இம்மாநாட்டினை தலைமையேற்று நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு ஜி 20 மாநாடு இந்தியாவின் தலைமையில் நடக்க உள்ளது.

இதில்; ஜி 20ல் சேர்ந்த நாடுகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக பொருளாதாரம் காலநிலை மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்றவை கலந்து ஆலோசிக்கப்படும் இம்மாநாட்டின் பயன்களை பற்றியும் மாநாடு நடைபெறும் நடைமுறை பற்றியும் எடுத்துரைக்க வளரும் பள்ளிக்குழந்தைகள் தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற மாதிரி ஜி20 மாநாடு பள்ளி நிர்வாகத்தால் உசிலம்பட்டியில் நடத்தப்பட்டது.

இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியர் 20 நாட்டின் தலைவர்களாக உருவகப்படுத்தி அந்நாட்டின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார கொள்கைகள்பற்றி எடுத்துரைப்பது போல் ஜி20 மாநாட்டின் பயன்களை பள்ளி மாணவ மாணவியருக்கு விளக்கிக் காட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எந்த நாட்டில் எதைப் பற்றி பேச வேண்டும் என்பது பற்றி எழுதிக் கொடுத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.இந்நிகழ்ச்சியினை பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.இம் மாதிரி மாநாட்டினால் சிறு வயதிலிருந்தே உலக நிகழ்வுகளை கற்று தெரிந்து கொள்ள வேண்டுமெனற ஆசையை தூண்டுவதாக பள்ளிக்குழந்தைகள் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!