குத்தாலத்தில்மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை நாகை எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி துவங்கி வைத்தார்

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாமை மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தொடக்கிவைத்தார்.பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர்,கொரோனா நெருக்கடி காலத்தில் மக்கள் வருவாய் இழந்துள்ளனர். இந்த 7 மாதங்களில் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு கூட மத்திய அரசு நேரடி உதவிகளையோ, பண்டிகை உதவிகளையோ வழங்கவில்லை. தீபாவளியை முன்னிட்டாவது மத்திய அரசு நாடெங்கிலும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.மனுநீதி மற்றும் திருமாவளவன் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர் இது குறித்த கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றார்.ரஜினியின் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அவர் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக கூறியவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ரஜினி ஆன்மீகம், அமைதி, தனிமை என விரும்புபவர். அரசியல் என்பது நெருக்கடி, மன அழுத்தம், பரபரப்பு ஆகியவற்றை கொண்டது. இது ரஜினியின் இயல்புக்கு ஒத்து வருமா? என தெரியவில்லை என்றார். மூப்பனார் காலத்தில் அவர் அழைத்தப் போதே வந்திருந்தால் அவர் இந்நேரம் ஒரு இலக்கை எட்டியிருந்திருப்பார் என்றும் கூறினார்.பிறகு குத்தாலம் ஆசியா மண்டபத்தில் மஜகவின் உறுப்பினர் சேர்ப்பு முகாமை பொதுச் செயலாளர் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் எங்கும் 100 இடங்களில் டிசம்பர் 31 வரை இம்முகாம்கள் பரவலாக முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார். உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு முதல் கட்டமாக அடையாள அட்டைகளையும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் வணிகர் அமைப்பினர், ஐமாத்தினர், மாநிலச் செயலாளர் ராசுதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் , மாவட்ட செயலாளர் சங்கை. தாஜ்தீன் ஆகியோரும் உடன் இருந்தனர்.மேலும், மாவட்ட பொருளாளர் தைக்கால் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், மிஸ்பாஹீதீன், அஜ்மல் உசேன், முகம்மது இப்ராஹிம், அசேன் அலி, மாவட்ட அணி நிர்வாகிகள் ஹாஜா சலிம், நீடுர் ஜெப்ருதீன், முகம்மது தவ்பிக், எஸ்.இப்ராஹிம், ஜெ.லியாகத் அலி, ஐ.கே.பி.மாவட்ட செயலாளர் முகம்மது பாசில், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அமீருல் அஸ்லம், மயிலாடுதுறை நகர செயலாளர் மருத்துவர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்