Home செய்திகள் துறையூர் கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி – அமைச்சர் பார்வை

துறையூர் கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி – அமைச்சர் பார்வை

by ஆசிரியர்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி – சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் துறையூர் கிராமத்தில் கஜா புயலால் சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் மரங்கள் அகற்றும் பணியினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ இன்று (26.11.2018) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேலும் மின் பணியாளர்களிடம்ää குறைகளை கேட்டறிந்தார்கள்.. மின் பணியாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து, பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் பரவாமல் தடுப்பதற்கும்,  கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கும் கொசு ஒழிப்பு பணியினை பார்வையிட்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து கொசு ஒழிப்பு பணியினை தடையின்றி மேற்கொள்ள சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல், வெங்கடாசலாபுரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலிருந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்குவதற்காக வரப்பெற்ற நிவாரணப்பொருட்களையும்ää பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நிவாரண பொருட்களையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்துää பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். அதனைத்தொடர்ந்து பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பேருராட்சி இயக்குநர் திரு.கே.பழனிச்சாமி இ.ஆ.ப., கண்காணிப்பு அலுவலர் திரு.மேகனாத் ரெட்டி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப., கிராந்தி குமார் இ.ஆ.ப., டி.ஆர்.ஒ. எ.அனுசுயா தேவி ஆகியோர்களுடன் நிவாரண மீட்பு பணிகள் முன்னேற்றம் குறித்தும், கடைக்கோடி கிராமம் வரை சீராக சென்றடைவது குறித்தும் மின்சார மிட்பு பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள்.

இதுகுறித்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது:-  தூத்துக்குடி மாவட்டம் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம், சென்னை மாவட்டம், திருப்பூர் மாவட்டம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தொடர்ந்து நிவாரண பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. பிரதான சாலைகள் மட்டுமல்லாதுää 91 வருவாய் கிராமங்களுக்கும் பேருராட்சி பகுதிகளுக்கும் மின்சார இணைப்புகள் தொடர்ந்து வழங்கிடää கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்துää பேராவூரணி தொகுதிக்குட்பட்ட பகுதிக்கு மட்டும் சுமார் 1500 – க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும்ää மின்சாரம் தடைப்பட்ட பகுதிகளில்ää புதியதாக மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதியதாக அமைப்பதற்கு தேவையான மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. நிவாரண பொருட்கள் 113 டன் அரிசி 10000 சேலைகள், 2,000 லிட்டர், சமையல் எண்ணெய், குழந்தைகளுக்கு தேவையான பிஸ்கட், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களும், 4,000 வேட்டிகள், 2,000 சட்டைகள் மற்றும் லுங்கிகள், பெட்சீட்கள், பாய், தண்ணீர் பாட்டில்கள், ரவை, கோதுமை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் பாதிக்கபட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிவாரண பொருட்கள் பாதிக்கபட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்குவதற்காக வரவழைக்கப்படுகிறது. தொடர்ந்து அத்தியாவசியமான உணவு பொருட்கள்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் தேவைப்பட்டால்ää அவை அனைத்தும் வழங்க உரிய நடவடிக்கைகள் துரித கதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் மற்றும் உயர் அலுவலர்களும் நிவாரண பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை, கணினி மூலம் கணக்கெடுக்கும் பணியினையும், நிவாரண நிதியுதவிகளை பெறுவதற்கு புதிதாக வங்கி கணக்குகள் துவங்குவதற்கான முகாமினையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!