Home செய்திகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..

by ஆசிரியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (26.11.2018) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.,பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தூத்துக்குடியில் பொது சுகாதாரத்துறை மற்றும் பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற மாறுகண் உடையவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பார்வை குறைபாடு உள்ள 30 குழந்தைகளுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி அவர்கள் சொந்த செலவில் வாங்கப்பட்ட மூக்கு கண்ணாடிகளை, பார்வை குறைபாடுள்ள 30 குழந்தைகளுக்கு இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 21.08.2018 அன்று தூத்துக்குடியிலிருந்து 70 கல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அந்த மீனவர்கள் தாயகம் திரும்பும்வரை, மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராக உள்ள 5 மீனவர்கள் குடும்பத்திற்கு தின உதவி தொகையாக நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் 22.08.2018 முதல் 31.10.2018 வரையுள்ள நாட்களுக்கு 1 மீனவருக்கு ரூ.17,500/- வீதம் மொத்தம் ரூ.87,500/- உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில்ää தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் திரு.இராமசுப்பு அவர்கள் தனது சொந்த நிதி ரூ.50,000/-க்கான காசோலையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில்ää தூத்துக்குடி முத்தையாபுரம் ஏ.வி.எஸ். தொடக்கப்பள்ளி மாணவர் யோகேஷ்ராம் தனது சொந்த சேமிப்பு மற்றும் வசூல் செய்த நிவாரண நிதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரான் ஜித் சிங் கலோன், இ.ஆ.ப., சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சங்கரநாராயணன்ää துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கீதாராணி, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) திருமதி பால சரஸ்வதி, தூத்துக்குடி கண் மருத்துவ பிரிவு தலைமை மருத்துவர் குமாரசாமிää மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!