Home செய்திகள் அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..

அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, கிராம சபை என்ற பெயரில் கிளைக்கழக கூட்டம் நடத்தும் திமுக – அமைச்சர் கடம்பூர் செ.ராஜு..

by ஆசிரியர்

அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, என்றும் கிராம சபை என்ற பெயரில் திமுக கிளைக்கழக கூட்டம் நடத்துவதாகவும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ கோவில்பட்டியில் பேசினார்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 102வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை வகித்தாh.இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்து கொண்டு பேசுகையில் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியை முதன் முதலில் நிறுவி காட்டியவர் ஜெயலலிதா, பிரதமரை உருவாக்கிய சக்தி படைத்தவர் ஜெயலலிதா, மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது, இதனை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம், திமுக எதை வைத்து வாக்கு கேட்பார்கள்,எத்தனை பேருடனும் கூட்டணி வைத்து வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம் என்றும், கனிமொழி இல்லை, அவங்க அண்ணன் ஸ்டாலின் இல்லை, அழகிரி இல்லை, அவர் இல்லை, தேர்தல் நேரத்தில் வேடிக்கை இருக்கிறது. நீங்க யார் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயராக உள்ளோம்,ஆகையால் அக்கா கனிமொழி வடக்கேயுள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பரவயில்லை, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது,ஜெயலலிதா முகம் மற்றும் இரட்டை இலை சின்னத்தை காண்பித்து வெற்றி பெற்றோம், நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நின்றாலும், கூட்டணி அமைத்து நின்றாலும், அதிமுகவிற்கு பாடம் புகட்ட யாரும் பிறக்கவில்லை, அதிமுக தொண்டன் மற்றவர்களுக்கு பாடம் புகட்டி தான் பழக்கம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடுத்தவருக்கு பாடம் புகட்டி தான் பழக்கம் தவிர, பாடம் படித்த பழக்கமில்லை, திமுக கிராம சபை கூட்டம் என்ற பெயரில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு கேட்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கிளை கழக கூட்டத்தினை போட்டுவிட்டு திமுக கிராமசபை கூட்டம் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது, திமுகவுக்கு புத்தி பேதலிச்சு போய்விட்டது என்றும், கொல்கத்தாவில் மற்றவர்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது, மு க ஸ்டாலின் கழக உடன்பிறப்பு என்று பேசும்போது , அங்குள்ளவர்கள் உடன்பிறப்பே பார்த்தார்களா இல்லை உளுந்தம்பருப்பை பார்த்தார்களா. மு க ஸ்டாலின் அசிங்கப்பட்டு திரும்பினர்,தமிழக முதல்வர் வழங்கிய பொங்கல் பரிசினால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் இல்லங்களிலும் பொங்கல் பொங்கியது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, தனக்கு வழங்கப்பட்ட தண்டணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளார். அதன் தீர்ப்பு எப்படி வந்தாலும் பரவ இல்லை, தேர்தலில் போட்டியிட கூடிய சூழ்நிலை வந்தால் மீண்டும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக வருவார் என்று முதல்வர் தெளிவாக தெரிவித்துள்ளார்.சட்டமன்ற இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் எந்தத் தேர்தல் வந்தாலும், தனித்து அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என்றார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!